ஞாயிறு, 27 நவம்பர், 2016

யானைகளின் இடுகாடு

இவ்வுலகில் பிறந்த எல்லாருக்குமே இறப்பு என்பது நிச்சயம் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். அது மனிதர்களாக இருக்கட்டும்,மிருகங்களாக இருக்கட்டும் பறவைகளாக இருக்கட்டும். எல்லாவற்றுக்குமே இறப்பு என்பது பொது விதி தான். ஆனால் எங்களுக்கு எப்போது இறப்பு நேரும் என்று யாருக்கும் தெரியாது. என்ன தான் முதுமை, நோய், இயலாமையுடன் இருப்பவர்களுக்குக் கூட தங்கள் மரணம் எப்போதென்று  நிச்சயமாகத் தெரியாது. இதற்குச் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. தற்கொடைப் போராளிகளைக் கூறலாம். என்ன தான் அவர்களின் எண்ணம் அழிவாக இருந்த போதிலும், தம் இனத்துக்காகவும், அவர்களின் எதிர்கால நன்மைக்காகவும் என்ற நம்பிக்கையில் இந்த வாழ்க்கையை விட்டுக்கொடுத்துத் தமது உடலைக் கொடூரமான வகையில் அர்ப்பணிக்கும் உயர் தியாகத்தை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. அதைத் தவிர திரைப்படங்களில் சிலருக்கு (பெரும்பாலும் கதாநாயகர்களுக்கு) வைத்தியர்கள் காலக்கெடு வழங்குவதையும் அவர்கள் தண்ணியடித்துத் தாடி வளர்த்துத் திரிவதையும், காதலியை வேறு யாருக்கும் தியாகம் செய்வதையும் பார்த்துக் கண்ணீர் வடித்திருப்போம்.

மிருகங்களில் யானைகளுக்கு தாம் இறக்கப்போகும் காலம் தெரிய வருவதாகப் புத்தகங்களில் வாசித்திருக்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன் விலங்குகளின் கிரகம்(Animal Planet) என்ற தொலைக்காட்சி வரிசையில் தந்தப் புதையலைத் தேடி (‘Searching Of Ivory Treasure’) என்ற நிகழ்ச்சியில் இதனைப்  பற்றி மேலும் சில சுவாரசியமான தகவல்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் பெற்றுக் கொண்ட தகவல்களையும், இணையத்தில் இது சம்பந்தமாகக் கிடைத்த தகவல்களையும் ஏற்கனவே வாசித்தறிந்த தகவல்களையும் தொகுத்துத் தருகிறேன்.

தம்மை மரணம் நெருங்கி வருவதை உணர்ந்து கொள்ளும் யானைகள் தங்கள் கூட்டத்திலிருந்து விலகி மரணத்தை அமைதியாகத் தழுவிக் கொள்வதற்கு  அதற்கென உள்ள விசேடமான, ரகசியமான இடத்தை நோக்கிச் செல்லுமாம். மனித விளக்கத்துக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான சக்தி மூலம் அந்த இடத்தை அறிந்து கொள்வதாக ஆபிரிக்க நாட்டுக் கதைகளில் சொல்லப்படுகிறது.  சில பழைய டார்ஸான் படங்களிலும் மற்றும் 1994 இல் வெளி வந்த ‘The Lion King’ படத்திலும் கூட இதைப்பற்றி சுவாரசியமாகச் சித்திரிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.
விஞ்ஞானிகளால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டாத இந்நிகழ்வைப் பலர் மறுத்துரைக்கிறார்கள். அதாவது கூட்டமாக யானையின் மண்டையோடு,எலும்புகள் என்பவற்றைக் கண்டால் அவற்றை யானைகளின் இடுகாடாக நினைக்கத் தேவையில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். மிகவும் பெறுமதியான ஒன்றாகக் கருதப்படும் யானைகளின் தந்தங்களுக்காக வேட்டைக்காரர்கள் அவற்றைக் கூட்டமாக வேட்டையாடியிருக்கலாம். அல்லது வேட்டைக்காரர்கள் நீர்நிலைகளில் நஞ்சு கலந்து கூட்டமாகக் கொன்றிருக்கலாம் அல்லது  ஒரு இடத்தில் உணவு கிடைக்காமல், அந்த இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கூட்டமாக  உணவு தேடி வந்த வேளை  மிகவும் பலவீனமாகி இறந்திருக்கலாம் அல்லது  அல்லது வறட்சி போன்ற காலநிலை மாற்றத்தினால் இறந்திருக்கலாம் அல்லது சமவெளிகளில் வீசும் கடுமையான காற்று ஆங்காங்கு காணப்படும் எலும்புகளை ஒரு இடத்தில் குவித்திருக்கலாம் அல்லது காடுகளில் அகழ்வுகளை மேற்கொண்ட மனிதர்கள் கண்டெடுத்த எலும்புகளை ஒரு இடத்தில் குவித்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.

ஏனைய விலங்குகளின் எலும்புகளில் ஆர்வம் காட்டாத ஆனால், தங்கள் இனத்தின் எலும்பை மோப்பம் மூலமாக உணர்ந்து கொள்ளும் யானைகள் அவற்றைத் தூக்கி வந்து வேறு இடங்களில் போடுவதும் மேலும்  பலவீனமான (கல்சிய சத்துக் குறைவான?) சில யானைகள் போஷாக்கை  தங்கள் உடலில் ஏற்றிக் கொள்வதற்காக தங்கள் இனத்தின் எலும்பை வாயிலிட்டு மெல்வதும் கூட அவதானிக்கப்பட்டிருக்கிறது. இவ்வினோதமான போக்கு முள்ளம்பன்றிகள் மற்றும் ஆமைகளிடமும் கூட காணப்படுகிறது.

இது தவிர, தங்கள் கூட்டங்களால் ஒதுக்கப்படும் யானைகள் சில உயிர் வாழப் பிடிக்காமல் உணவைத் தவிர்த்து  பலவீனமடைந்து இறந்து  விடுகின்றன என்றொரு விடயமும் கென்யா நாட்டு வனப்பாதுகாப்புப் பிரிவினரால் பல தடவைகளுக்கு மேல் அவதானிக்கப்பட்டிருக்கிறது. இளம், முதுமையடையாத, எந்தக் காயங்களுக்கும் உட்படாத யானைகளே இவ்வாறு உணவு தவிர்ப்பை மேற்கொள்ளுகின்றன என்றும் ஆனால் இவ்வாறான யானைகள் மரணிப்பதற்காக இரகசியமான இடங்களைத் தேடிச் செல்வதில்லை என்றும் கூட அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இதற்கும் யானைகளின் இடுகாடு என்ற விடயத்திற்கும் சம்பந்தமில்லை.    
தந்தங்களைத் தேடி யானைகளை வேட்டையாடுபவர்கள் யானைகளின் இடுகாட்டைப் பொக்கிஷமாகக் கருதுவதால் தங்கள் உயிரை மதிக்காமல் அப்படியான இடங்களைத் தேடிப் புறப்படுகிறார்கள். அவ்வாறு செல்பவர்களில் அனேகர் திரும்ப வருவதில்லை என்ற விடயமும் திரும்ப வந்தவர்கள் யானைகளின் இடுகாட்டைக் கண்டதில்லை என்ற விடயமும் குறிப்பிடப் பட வேண்டிய விடயங்களாகும். அத்துடன் திரும்ப வந்தவர்களும் வயதான, பலவீனமான தனித்துச் சென்ற யானைகளைத் தாங்கள் ரசியமாகப்  பின்தொடர்ந்ததாகவும், அவை தாங்கள் யாராலோ பின்தொடரப்படுகிறோம் என்று அறிந்தோ என்னமோ அவை சுற்றிச்சுற்றி தங்களைக் குழப்பத்திற்குள்ளாக்கியதுடன் ஆபத்தான இடங்களின் மூலம் சென்றதாகவும் இதனால் தங்கள் குழுவில் பலர் உயிரிழக்க நேரிட்டது என்றும் கூறியிருக்கிறார்கள்.

இது மிக அதிகளவில் நிகழும் ஆபிரிக்காக் கண்டத்தில், இவ்வாறான இடங்களை யானைகள் தங்களின் புனித இடங்களாகக் கருதுகின்றன என்றும் அந்த இடங்களின் பாதுகாப்புக்குத் முதுமையடையாத, பெரிய தந்தங்களையுடைய  யானைகள் காவலுக்கு நிற்கும் என்றும் அவை தந்தங்களைத் தேடிச் செல்பவர்களைக் கொன்று விடுகின்றன  என்றும் கதைகள் வழிவழியாகக் சொல்லப்பட்டு வருகின்றன. அதை விட, இன்னும் சற்று அதிகப்படியாக யானைகளின் இடுகாடுகளில் புனிதமான, மகிமை வாய்ந்த, மந்திர உச்சாடனங்களைக் கொண்ட  புத்தகங்கள் இருக்கின்றன என்றும்  அவை வாழ்வின் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு வழிகாட்டுகின்றன என்றெல்லாம் கூட சொல்லப்பட்டு வருகின்றன. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தம் கூட யானைகளுக்கும் புத்தகங்களுக்கும் இல்லையென்பதால் ஒரு சுவாரசியத்துக்காக அதனை உள்வாங்கிக் கொள்ளலாம்.
எப்படியாயினும் யானைகளின் இடுகாடு என்பது உண்மையா இல்லையா என்பது இன்னும் கேள்விக்குரிய ஒன்றே. உயிரோடு இருக்கும் போதும் தனது கூர்மையான ஞாபகசக்தி, அசாத்தியப் பலம் ஆகியவற்றால் மனிதனை வியப்புக்குள்ளாக்கும் யானைகள் தமது இறப்பின் பின்பும் மனிதனை வியப்புக்குள்ளாக்குவதற்கு இந்த விடயத்தைப் பயன்படுத்துகின்றன எனக் கொள்ளலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக