51. Sea legs: கடலில்
கப்பலின் ஆட்டத்துக்குப் பழக்கப்பட்டு விட்ட கால்கள்.
52. At sea: மிகவும் குழம்பிய
நிலையில் இருத்தல்.
53. Between the devil and the deep blue sea: ஒரே சமயத்தில் இரண்டு பாரிய
பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தல்.
54. Sea change: மிகப்பெரிய மாற்றம்.
55. Son of a sea biscuit: ஆங்கிலேயர்கள் திட்டுவதற்கு அடிக்கடி பாவிக்கும் “பெண்
நாயின் மகன்” என்பதற்குப் பதிலீடாகப் பாவிக்கப்படும் சற்றுக் கடுமை குறைந்த சொற்றொடர்.
56. There are plenty of (other) fish in the sea: ஏதாவது ஒரு விடயத்தில் ஏராளமான தெரிவுகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தும்
வாக்கியம்.
57. From sea
to shining sea: கடற்கரையோரப் பிரதேசங்களில் ஏதாவது
ஒரு செய்தி அல்லது வேறு ஏதாவது ஒரு விடயம் பரவுதல் இந்தச் சொற்றொடர் மூலம்
குறிக்கப்படுகிறது.
58. Go to sea: மீனவன் ஆதல் அல்லது மாலுமியாதல்
அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் கடலுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்தல்.
59. Sea level: கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு
உயரத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் அமைந்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தும் சொல்.
60. Go to sea for pleasure, would go to hell for a
pastime: கடலுக்குப் பொழுதுபோக்கிற்காகப் போகும் மனிதர்கள் நிச்சயம்
பைத்தியக்காரர்களாகத் தான் இருப்பார்கள் (கடல் வாழ்க்கையிலுள்ள சிரமத்தை எடுத்துக்
காட்டுகிறது) என்று நகைச்சுவையாக யதார்த்தத்தை எடுத்துக் காட்டும் வாக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக