சில விசேட சொற்றொடர்கள்-5 (தொடர்ச்சி)
41.Conversation piece: பொதுவாக எல்லோரும் ஆர்வமாகக்
கதைக்கும் ஓர் சுவாரசியமான அல்லது ஓர்
வித்தியாசமான விஷயம்.
42.Jump to conclusion: போதுமான தரவுகள் அல்லது
தகவல்கள் இன்றி ஒரு நிலைமையை ஊகித்தல்.
43.Be on a collission course: எதிர் காலத்தில் ஒரு
முரண்பாட்டைத் தரக் கூடிய விஷயம் பற்றிக் கதைத்தல் அல்லது அதனைச் செய்தல்.
44.Every cloud has a silver lining: ஒரு
துயரமான அல்லது கவலையான நிலையிலும் கூட ஒரு சின்ன மகிழ்ச்சியான விஷயம் இருக்கும்.
45.Be the brains behind: வெற்றிகரமான நடவடிக்கையைப்
பின்னாலிருந்து இயக்கிய அதன் சூத்திரதாரி.
46.Back the wrong horse: தோல்வியடையும் சாத்தியம்
அதிகமாக இருக்கும் ஒரு நபருக்கு ஆதரவு தெரிவித்தல்.
47.Turn the sword into plough shares: போருக்குப்
பயன்படுத்திய பணத்தை அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப்
பயன்படுத்தல்.
48.Storm in a tea cup: முக்கியத்துவமே இல்லாத
விஷயமொன்றுக்குக் கோபப்படுதல் அல்லது கவலைப்படல்.
49.Safety valve: மற்றவர்களின் மனம் பாதிக்காத
வண்ணம் தனது கோபத்தையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் முறை.
50.Turn the page: சிரமங்கள்,
துயரங்களிலிருந்து மீண்டு புதிதாக வாழ்க்கையைத் தொடங்குதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக