உதயமாகிறது ஒரு புதிய சேவை!


உங்களுக்குத்
தேவைப்படும் பொருட்களை யாழ்ப்பாணத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும், முக்கியமான நாட்களில் உங்கள்
அன்புக்குரியவர்களுக்குப் பரிசுகளை வீட்டிற்கே அனுப்பிக் கொள்ளவும் வாய்ப்பான ஒரு
சேவை!
யாழ்ப்பாணத்திலிருந்து
ஏதேனும் பொருட்கள் உங்களுக்குத் தேவைப்படுகிறதெனில் அல்லது ,யாழ்ப்பாணத்தில் இருக்கும் உங்கள்
அன்புக்குரியவர்கள் யாருக்கேனும் ஏதேனும் பொருட்களை யாழ்ப்பாணத்திலேயே வாங்கி
அவர்களிடம் சேர்ப்பிக்க விரும்புகிறீர்களெனில் உங்கள் தொடர்புகளுக்கு........
பெயர்
: ஆ.தீபன்
கைத்தொலைபேசி இலக்கம்: 0094777115876
மின்னஞ்சல் முகவரி : theebanvalvai@yahoo.com
வங்கி விபரங்கள் :இலங்கை வங்கி,வல்வெட்டித்துறைக் கிளை,
நடைமுறைக்
கணக்கிலக்கம் 73307443 
மேற்கொண்டு, இதனைப் பற்றி அறியவும் இதற்கான
எண்ணம் எப்படி உதயமானது என்று அறியவும்
விரும்புபவர்கள் தொடர்ந்து படியுங்கள்.
வல்வை அலையோசையின் முதலாவது இதழ் வெளிவந்து சில
நாட்களில் எனது நண்பன் ஒருவனுடன் வல்வை
அலையோசைக்குக் கிடைத்த வாழ்த்துக்கள், அறிவுரைகள், கருத்துக்கள் பற்றி மகிழ்ச்சியாகக்
கதைத்த போது யதார்த்தவாதியான அந்த நண்பன் கேட்ட கேள்வி “இதை வெளியிடுவதால் ஏதேனும்
பண ரீதியான நன்மை கிடைக்கிறதா?” என்பது தான். நானும் “அப்படி
ஒன்றுமில்லை. ஒரு மனத்திருப்திக்காகத் தான்” என்று பதிலளித்தேன். “அதற்காக இவ்வளவு
நேரம் இதற்காகச் செலவழிக்க வேண்டுமா?” என்று மீண்டும் கேட்க
நானும் “நாங்கள் செய்யும் எல்லாவற்றுக்காகவும் பணத்தை எதிர்பார்க்க முடியுமா?ஆத்ம திருப்திக்காகவும் நாங்கள் சில காரியங்களைச் செய்வதுண்டு தானே, ஏன் நீங்கள் அப்படி ஒன்றும் செய்வதில்லையா?” என்று
வாக்குவாதப்பட்டதுடன் அந்தக் கதை அப்படியே முடிந்து விட்டது.
அதன் பின்பு வேறு
ஒருத்தரும் அந்த விடயம் பற்றிக் கதைக்காமல் விட்டாலும் அப்போது எழுந்த உறுத்தலானது
மனதின் ஓரத்தில் அப்படியே நின்று விட்டது. வல்வை அலையோசை ஆரம்பிக்கும் முன்னரே ஒரு
இணையத்தளம் ஆரம்பித்து எனது கட்டுரைகளை அதில் பிரசுரிப்பதன் மூலம் எனது
எழுத்தையும் மெருகூட்டி(?) அதே
சமயம் ஏதேனும் வழியில்(விளம்பரம்) அந்த இணையத்தளம் மூலமாக உழைத்தால் மனத்திருப்திக்கு
மனத்திருப்தியுமாயிற்று, வருமானத்துக்கு வருமானமுமாயிற்று
என்று யோசித்திருக்கிறேன். ஆனால் திருப்தியான ஒரு எண்ணமும் உதயமாகவில்லையாதலால்
இப்போது மனத்திருப்திக்காகச் செய்வோம். பின்னர் சந்தர்பம் கிடைக்கும் போது
வருமானத்தைப் பார்த்துக் கொள்வோம் என்று தான் வல்வை அலையோசையை ஆரம்பித்தேன். இது
சம்பந்தமாக முதலாவது இதழில் பிரஸ்தாபித்ததாக ஞாபகம்.
அதன் பின்பு “வல்வை
அலையோசை “மூலமாக உழைப்பதற்கான ஒரு வாய்ப்புத் தானாகத் தேடி வந்தது வந்தது. வெளி நாட்டிலுள்ள எனது நண்பன் ஒருவன்
மூலமாக. வல்வை அலையோசையை ஒரு வர்த்தக ரீதியான இணையத் தளமாக்குவதற்கான செலவையும், விளம்பரங்கள் தேடித்தரும் பொறுப்பையும்
தான் ஏற்றுக் கொள்வதாகவும் கிடைக்கும் இலாபத்தை ஏதேனும் ஒரு உடன்பாட்டுக்கு வந்து
பிரித்துக் கொள்வோம் என்றும் அந்த நண்பன் கூறிய போது உள் மனது சந்தோசத்தில் பரபரத்ததென்னவோ உண்மை தான். ஆனால் எனது பலவீனம்
பற்றி எனக்குத் தெரியும் தானே. வர்த்தக ரீதியான இணையத் தளத்தில் எழுதுமளவுக்கு
எனது எழுத்தில் ‘கனம்’ இல்லை. எனது
எழுத்தை நம்பி முதலிடும் விஷப்பரீட்சையை நான் செய்யலாம். ஆனால் மற்றவர்களைச்
செய்யவிடக் கூடாது என்று நான் உடன்படவில்லை.
அண்மையில்
அவுஸ்திரேலியாவிலுள்ள எனது நண்பனொருவனுக்கு விருப்பமான பொருள் ஒன்றை பொதியனுப்பும்
சேவை மூலமாக அனுப்பிய போது தான் இந்த எண்ணம் உதயமாயிற்று. பொதியனுப்பும் சேவை
வழங்கும் எத்தனையோ நிறுவனங்கள் இருப்பினும் அவர்கள், பொருட்களை யாராவது வாங்கிக் கொண்டு போய் ஒப்படைத்தால் தான்
அனுப்புவார்கள். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஏதேனும் பொருட்கள் இங்கிருந்து
தேவைப்படுகிறதெனில் அவர்கள் எல்லோருமே தங்கள் குடும்பம் மூலமாகவோ அல்லது சொந்தம்
மூலமாகவோ பெற்றுக் கொள்ள விரும்புபவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்குச்
சிரமத்தைக் கொடுக்காமல் இதைத் தொழிலாக மேற்கொள்பவர்களிடம் இந்த வேலையை ஒப்படைக்க
விரும்புபவர்கள் ஒரு சிலராவது இருக்கக் கூடும்.
அதே போல் இங்குள்ளவர்களுக்கு ஏதேனும் பரிசுப் பொருட்களை அனுப்ப விரும்புபவர்கள்
இருக்கக் கூடும். வெளிநாட்டிலிருந்து பரிசுப்பொருள்
அனுப்புவதானால் நிறையப் பணம் செலவாகும். அதற்குச் செலவிடுவதிலும் பார்க்க எத்தனையோ
மடங்கு குறைவாகச் செலவிட்டால் இங்கேயே நல்ல திருப்தியான பரிசு வாங்கி விட
முடியும். இதனையும் தங்களுக்குக்குத் தெரிந்தவர்கள் மூலம் செய்விக்க விரும்பாது, அதாவது அவர்களைச் சிரமப்படுத்த விரும்பாது செய்ய விரும்புபவர்கள்
இருக்கக் கூடும். அதோடு சிலருக்கு இவ்வளவு உரிமையாகச் சொல்லிச் செய்விப்பதற்கு ஆட்களும் இருக்க மாட்டார்கள்.
அவர்களுக்கென ஒரு சேவையை ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது.
உதாரணத்திற்கு
ஜெர்மனியில் இருக்கும் ஒருவர் என்னை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கைத்தொலைபேசி
மூலமாகவோ தொடர்பு கொள்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு
கைதடியிலிருந்து ஒரு சித்த வைத்திய மருந்தொன்று தேவைப்படுகிறது. மருந்தின் விலை
தெரிந்திருக்கும் பட்சத்தில்,
அதன் விலை, போக்குவரத்துச் செலவு உள்ளடங்கலாக எனது சேவைக்
கட்டணம்(வெளிநாட்டு நாணயத்தில் மாற்றிப் பார்க்கும் போது உங்களுக்கு எனது சேவைக்
கட்டணம் ஒன்றுமில்லாததாகத் தோன்றக்
கூடும்),மற்றும் அதனை அனுப்புவதற்கான செலவு (உங்கள்
விருப்பத்திற்கேற்ப சாதாரண தபாற் சேவை, சாதாரண courier சேவை, விரைவு courier சேவை)
என எல்லாச் செலவுகளுமாகச் சேர்த்து இவ்வளவு என்று ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தைத்
தெரிவிப்பேன். அவருக்கு அதில் உடன்பாடாயின் அந்தப் பணத்தை இலங்கையிலுள்ள எனது
வங்கிக் கணக்கு ஒன்றுக்கு வைப்புச் செய்ய வேண்டும். பணம் கிடைத்ததும் அவருக்குரிய பொருள்
அனுப்பி வைக்கப்படும். பொருளின் பற்றுச் சீட்டு,(கிடைத்திருந்தால்)
பொதியனுப்பும் சேவையின் பற்றுச் சீட்டு என்பனவும் பொருளோடு சேர்த்து அனுப்பி வைக்கப்படும் அல்லது அவருக்கு
மின்னஞ்சல் இருக்குமாயின் scan பண்ணி அனுப்பி வைக்கப்படும்.

அதே போல் பிரான்சில்
இருக்கும் ஒருவர் வல்வெட்டித்துறையிலுள்ள தனது தாயின் பிறந்த நாளன்று ஏதேனும்
பரிசுப் பொருளைச் சேர்ப்பிக்க விரும்புகிறார் எனில் என்ன மாதிரியான பொருள் என்றும், எவ்வளவு தொகைக்குள் வாங்க விரும்புகிறார்
என்று தெரிவித்தால் பொதியனுப்பும் சேவைக்கும் எனது சேவைக்குமான கட்டணத்தைத்
தெரிவிப்பேன். அவர் அதற்கு உடன்பட்டு எனது வங்கிக் கணக்குக்குப் பணம்
அனுப்புவாராயின் உரிய நேரத்தில் அவ்வேலை செய்து முடிக்கப்பட்டு மின்னஞ்சல் தரப்பட்டிருக்குமாயின் உரிய பற்றுச் சீட்டுகள் scan பண்ணி அனுப்பி வைக்கப்படும்.
ஆரம்பத்தில் இவ்வேலையைத்
தெரிந்தவர்கள், அறிந்தவர்களுக்கு
மட்டும் தான் செய்ய எண்ணியிருக்கிறேன். சரியாகச் சொல்வதானால் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மட்டும் தான் என்னை நம்பி வேலையை ஒப்படைக்கக் கூடும்.
ஏனெனில் ‘வல்வை அலையோசை’யில்
மட்டுமே இது பற்றி அறிவிக்கவிருக்கிறேன். என்னென்ன நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கின்றன
என்று அறிவதற்கும், அனுபவம் பெறுவதற்கும் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி கொண்டு வெளி
வட்டத்திற்கு நகரலாம் என்று யோசிக்கிறேன்.
நண்பர்கள், உறவினர்கள், ஏனைய என்னை அறிந்த, தெரிந்தவர்கள், ‘வல்வை
அலையோசை’யைப் படிப்பவர்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான
வேண்டுகோள்.... உங்களுக்குத்
தெரிந்தவர்களிடம் இப்படி ஒரு சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதை,
வாய்ப்புக் கிடைக்கும் போது தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக
இந்த சேவை யாருக்குப் பொருத்தமோ அவர்களிடம் பிரஸ்தாபிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி
!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக