ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சில விசேட சொற்றொடர்கள்-தொடர்ச்சி

                        சில விசேட சொற்றொடர்கள்-தொடர்ச்சி
31. Chicken & egg situation: பொதுவான இரண்டு தொடர்புபட்ட சம்பவங்களில் எது முதலில் நிகழ்ந்தது என்று தெரியாத நிலைமை   
32. Big gun/Big cheese: ஒரு குழுவில் அல்லது நிறுவனத்தில் மிகவும் முக்கியமான செல்வாக்கான நபர்
33. Honeymoon period: மற்றவர்கள் (உங்கள்) வேலையைக் குறை சொல்லாத, அந்த வேலையில் புதிதாக உள்ள காலப்பகுதி
34. Carry weight: ஒருவரின் சொல் அல்லது செயல் இன்னொருவரின் சொல் அல்லது செயலில் செலுத்தும் செல்வாக்கு.
35. Red letter day: மிகவும் முக்கியமான அல்லது விசேஷமான நாள்.
36. Paper chase: ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்காக ஆவணங்களுடன் தொடர்புபட்ட நிறைய வேலைகளைச் செய்தல்.
37. Parkinson’s law: ஒரு வேலையை முடிப்பதற்காகக் கொடுக்கப்படும் அதிகளவான நேரம் அந்த வேலையை இன்னும் விரிவடையச் செய்யும் என்ற ஒரு பொதுவான விதி.
38. Nuts and bolts: ஒரு நடவடிக்கை அல்லது வேலையின் மிகவும் அடிப்படையான செய்முறைத் தகவல்கள்.
39. Horses for courses: ஒவ்வொரு வேலைக்கும் அந்தந்தத் திறமையுடைய ஆட்களை நியமிக்கும் தன்மை.
40. Necessary evil: அறவே விரும்பத் தகாத ஆனால் அவசியம் இருக்க வேண்டிய ஒன்றைக் குறிப்பது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக