வல்வையின் வரலாற்று ஆவணக் காப்பகம்
Canada வில் வாழும் திரு.ந.நகுலசிகாமணி அவர்களும் அவரது துணைவியார் திருமதி.உமா அவர்களும் இணைந்து வல்வை என்ற வரலாற்றுப் பெருமை வாய்ந்த ஊரின் பழைய ஆவணங்கள், ஞாபகச் சின்னங்கள் ஆகியவற்றைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். சேகரித்து வைத்திருப்பதோடு நின்று விடாமல் நமது ஊரின் பெருமையை எல்லோரும் அறிய வேண்டுமென்பதற்காக ஊரிக்காட்டில் பிரதான வீதியில் உள்ள வீடொன்றில் காட்சிப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள்.
அருமையான, வித்தியாசமான, எவ்வளவு காலம் சென்றாலும் எங்கள் ஊரின் பெருமையை நினைவு கூறக்கூடிய, ஊரின் சிறப்புக்களை எல்லோரும் அறிந்து கொள்ளக்கூடிய முயற்சி. ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை அனேகர் நினைத்துப் பார்ப்பதில்லையெனினும் இது ஒரு மிக முக்கியமான பணியாகும். தங்களை மட்டும் நினைக்காது ஏனையவர்களையும் நினைக்கக் கூடியவர்களே இந்தப் பணியில் நேரத்தைச் செலவழிப்பார்கள்.
எங்கள் ஊரின் சில சிறப்புக்களை, காலங் காலமாகப் பேசப்பட்டு வரும் கதைகள் மூலம் மேலோட்டமாக நாங்கள் அறிந்து வைத்திருந்தாலும் அவற்றை இவ்வளவு விபரமாக ஆவணங்கள், ஞாபகச் சின்னங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளும் போது இவ்வளவு சிறப்பு மிக்க ஊரிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. பெருமையில் பங்கெடுத்துக் கொள்ள நாங்கள் என்ன செய்தோம் என்று நினைத்துப் பார்க்க உறுத்தலாகவும் இருக்கிறது.
ஆழிக் குமரன் ஆனந்தனின் நீச்சல் சாதனை, வல்வெட்டித்துறையின் கப்பற் சிறப்புக்கள், மற்றும் வல்வைக் கடல் சம்பந்தமாக வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம் சேர்த்து வைத்திருக்கும் சில ஆவணங்கள் சில உங்கள் பார்வைக்கு.
திரு நகுலசிகமணி அவர்களுக்கும் திருமதி உமா அவர்களுக்கும் ஊரவர்கள் சார்பிலும் “வல்வை அலையோசை “ சார்பிலும் எனது நன்றிகள்.
புகைப்பட உதவி :திரு சி.ஜெயகாந்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக