ஞாயிறு, 30 டிசம்பர், 2012

ஊரணி தீர்த்தம்

                                                     ஊறணி தீர்த்தம்
இது தானாகவே தோன்றியதால் தான் இதற்குரிய இந்தப் பெயரும் உண்டானது என்பது ஐ‌தீகம். அதாவது ஊறும் நீர் என்ற பெயர் தான் ஊறு நீர் ஆகி பின்பு காலப்போக்கில் ஊறணி என்ற பெயர்  உண்டாகி பின்பு  அதைச் சுற்றிவர அமைந்திருக்கும் பிரதேசத்திற்கும் அப்பெயரே நிலைத்தது எனலாம்.
வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து 1.5 k.m தூரத்திலும் வல்வெட்டித்துறை இந்திராணி வைத்தியசாலைக்கு சற்றுத் தள்ளி அதற்கு முன்புறமாகவும் கடலுக்கு மிக மிக அருகிலும் ஊறணி தீர்த்தம் அமைந்திருக்கிறது. ஆனாலும் இதன் நீர் உப்புத் தன்மையற்று இருப்பதற்கு தெய்வீக சக்தியே காரணமென்றும் அதோடு இதில் நீராடினால் தீராத தோல் வியாதிகள் எல்லாம் தீர்ந்து விடுமென்றும் இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அது பராமரிப்பின்றி  குப்பைகள் சேர்ந்து காணப்படும் தோற்றத்தைப் பார்த்தால் எதிர்மாறாகத் தான் அதாவது இதில் நீராடினால் தான், இல்லாத தோல் வியாதிகள் எல்லாம் வந்து சேர்ந்து விடுமோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
வல்வெட்டித்துறையிலுள்ள அனேகமான கோயில்களின் (பெரிய கோயில்களான  வல்வை சிவன், வல்வை முத்துமாரியம்மன், நெடியகாட்டுப் பிள்ளையார் உட்பட) மற்றும் பொலிகண்டி கந்தவனம் கோயிலின் தெய்வ விக்கிரகங்கள் அல்லது சிலைகள்  நீராட ஊரணி தீர்த்தத்துக்கு எடுத்து வரப்படுவது ஊரணி தீர்த்தத்தின் விசேட அம்சங்களில்  ஒன்றாகும்.   
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக