Contagion-ஆங்கிலத்
திரைப்படம்
ஹாங்காங்கில் ஒரு வணிக
பயணத்திலிருந்து திரும்பும் பெத் எம்ஹாஃப்
தனது பயணத்தின் இடையில் சிகாகோவில் தனது
முன்னாள் காதலரை சந்திக்கிறார். இருவரும் உல்லாசமாக
இருக்கின்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, புறநகர் மினியாபோலிஸில் உள்ள அவளது வீட்டில், வலிப்புத்தாக்கங்களுடன்
அவள் மயங்கி விழ, அவரது கணவர் மிட்ச் எம்ஹாஃப் அவளை
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார், ஆனால் அவர்
அறியப்படாத காரணத்தால் இறந்துவிடுகிறார். மிட்ச் வீடு திரும்பியபோது, அவரது வளர்ப்பு மகனான கிளார்க்கும் இறந்துவிட்டார் என்பதைக்
காண்கிறார். மிட்ச்சும் தனிமையில்
வைக்கப்படுகிறார், ஆனால்
பின்னர் அவரது நோய் எதிர்ப்பு சக்தி மூலம்
அவருக் கு அந்த
மர்ம நோய் தொற்றாதது கண்டறியப்படுகிறது; அவர் தனது மகள்
ஜோரியுடன் வீடு திரும்புகிறார்.
அட்லாண்டாவில், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையங்களின் பிரதிநிதிகள் டாக்டர் எல்லிஸ் செவரைச் சந்தித்து, இந்த நோய், அமெரிக்கர்கள் எதிர்வரும் வார இறுதியில் கொண்டாடவிருக்கும் நன்றி செலுத்தும் பண்டிகையின் போது பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு உயிரியல் ஆயுதம் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள் . செவர் ஒரு தொற்றுநோய் புலனாய்வு சேவை அதிகாரியான டாக்டர் எரின் மியர்ஸை மினியாபோலிஸுக்கு விசாரணைக்கு அனுப்புகிறார். அவர் இந்த தீவிர நோய் பரம்பலுக்கு மூல காரணம் பெத் எம்ஹாஃப் என்பதைக் கண்டு பிடிக்கிறார். . உள்ளூர் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார், அவர்கள் மக்களின் பொது சுகாதாரத் தேவைகளுக்காக வளங்களைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள். சில நாட்களின் பின்னர் மியர்ஸும் தொற்று ஏற்பட்டு இறந்து விடுகின்றார். நோய்க்கிரு மிகளின் தீவிர பரம்பலின் விளைவாக பல நகரங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன.மேலும் கொள்ளை மற்றும் வன்முறைகள் நாடெங்கும் பரவுகின்றன.
நோய் கட்டுப்பாட்டுத்
தடுப்பு மையத்தில் பணி புரியும் டாக்டர் அல்லி ஹெக்ஸ்டால், இந்த நோயானது பன்றி மற்றும் வௌவால் மூலம் பரவும் நோய்க்கிருமிகளிலிருந்து
வரும் மரபணு பொருட்களின் கலவையெனக் கண்டுபிடிக்கிறார். தனிமைப்படுத்தல் மையங்களில் வேலை செய்தாலொழிய புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த
வைரஸை (MEV-1) அழிப்பதற்கு வளர்ப்பதற்கு தடுப்பு மருந்தை விஞ்ஞானிகள்
கண்டுபிடிக்க முடியாது என்று தீர்மானிக்கிறார். கலிஃபோர்னியா பல்கலைக்கழக
பேராசிரியர் டாக்டர் இயன் சுஸ்மான் தனக்கு இடப்பட்ட உத்தரவுகளை மீறி வௌவாலின்
உயிர்க்கலங்களில் இருந்து இந்த நோய்க்கிருமியானது எவ்வாறு உருவாகிறது என்று அடையாளம் காட்டுகிறார். இந்தத் திருப்புமுனையோடு
இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டு பிடிக்கும் வேலையைத் தொடங்குகிறார். பிற
விஞ்ஞானிகள் சுவாச நீர்த்துளிகள் மற்றும் தொடுபொருட்கள் மூலம் இந்த நோய் பரவுவதாக்கத் தீர்மானிக்கிறார்கள்.
இந்த நோய்க்கிருமியானது நான்கு மடங்காக இனப்பெருக்கம் செய்யும் என்ற அனுமானத்துடன் உலக மக்கள்தொகையில்
12 ல் 1 பேர் 25-30% இறப்பு விகிதத்துடன் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள்
கருதுகின்றனர்.
இதற்கிடையில் ஆலன் க்ரூம்வீட் என்பவர் தனது வலைப்பதிவில் நோய்க்கிருமிகள் குறித்த ஒளிப்பதிவுகளை இடுகிறார். அதிலொரு ஒளிப்பதிவில் ஃபோர்சித்தியா என்றழைக்கப்படும் மஞ்சள் பூக்களைக் கொண்ட தாவரத்திலிருந்து பெறப்பட்ட ஹோமியோபதி சிகிச்சையைப் பயன்படுத்தி தான் நோயைக் குணப்படுத்தியதாகக் கூறுகிறார். இதன் விளைவாக மக்கள் ஃபோர்சித்தியாவைத் தேடிப் படையெடுக்கிறார்கள் . ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது, க்ரூம்வீட், சீவர் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்னர் சிகாகோவை விட்டு வெளியேறுமாறு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ரகசியமாக அறிவித்ததாக வெளிப்படுத்துகிறார். அவர் இது சம்பந்தமாக விசாரிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுவதுடன் ஃபோர்சித்தியாவின் விற்பனையை அதிகரிப்பதற்காக தனது நோய் உண்டாகி பின்பு குணமானதாகப் போலியாகச் சித்தரித்த மோசடிகளுக்காக க்ரூம்வீட் கைது செய்யப்படுகிறார்.
ஒரு வீரியம் குறைந்த வைரஸைப் பயன்படுத்தி, ஹெக்ஸ்டால் ஒரு தடுப்பு
மருந்தைக் கண்டுபிடிக்கிறார். . அதனைப் பயன்படுத்த பாதிக்கப்பட்ட
நோயாளிகளிடமிருந்து சம்மதத்தைப் பெறுவதற்கு எடுக்கும் நீண்ட நேரத்தை குறைப்பதற்காக
ஹெக்ஸ்டால் பரிசோதனைக்காக தனக்குத் தானே தடுப்பூசி ஏற்றிக் கொண்டு , தொற்றடைந்த தனது தந்தையை
சந்திக்கிறார். ஆனால் உண்மையில் அவரது தந்தை MEV-1ஆள்
பாதிக்கப்பட்டிருக்கவில்லை. ஹெக்ஸ்டாளுக்குத் தொற்று ஏற்படாததை அடுத்து தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு விட்டதென வெற்றிகரமாக
அறிவிக்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையம் பிறந்த தேதியை
அடிப்படையாகக் கொண்ட வரிசையில் தடுப்பூசிகளை வழங்குகிறது. இந்த நேரத்தில், இறப்பு எண்ணிக்கை அமெரிக்கவில் 2.5 மில்லியனையும் உலகளவில் 26
மில்லியனையும் எட்டுகிறது.
முன்னதாக, ஹாங்காங்கில், உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் லியோனோரா ஓரண்டஸ் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் மக்காவ் சூதாட்ட விடுதியில் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் இந்த நோயின் முதல் தொற்று பெத் எம்ஹாஃப் தான் என்று அடையாளம் காண்கிறார்கள். அரசாங்க அதிகாரி சன் ஃபெங் தனது கிராமத்திற்கு MEV-1 தடுப்பூசியைப் பெறுவதற்காக ஓரண்டஸை கடத்திச் சென்று அவரைப் பல மாதங்கள் அடைத்துவைத்திருக்கிறார். .உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் சன் ஃபெங்கின்கிராமத்துக்குத் தடுப்பூசிகளை வழங்கும் போது அவள் விடுவிக்கப்படுகிறாள். கிராமத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் போலி மருந்துகள் என்று ஓரண்டஸ் அறிந்ததும், அவற்றை எச்சரிக்க அவள் ஓடுகிறாள்.
ஒரு நினைவுமீட்புக்
காட்சியில் , சீனாவில்
மழைக்காடுகளை அழிக்கும் போது ஒரு மண் அள்ளும் இயந்திரம் ஒரு வாழை மரத்தைக் கீழே
விழுத்த, அதிலிருந்த வெளவால்கள் பறந்து செல்கின்றன. ஒரு பன்றி, பண்ணையில் கொண்டு போய் வைக்கப்பட்ட அந்த வெளவால்கள் உண்டு மீதம்
வைக்கப்பிட்டிருந்த வாழைப்பழங்களின் ஒரு பகுதியை சாப்பிட்டு விடுகிறது. மக்காவ் சூதாட்ட விடுதியில் ஒரு சமையல்காரரால் பன்றி கொல்லப்பட்டு
சமைக்கப்படுகிறது. அந்த சமையல்காரரில்
தொற்றடைந்திருந்த நோய்க்கிருமி பெத்துக்கு
கைகுலுக்கல் மூலம் தொற்றுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக