செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

மூடப்பட்ட ஆவரங்கால் கிணறு

                                      மூடப்பட்ட ஆவரங்கால் கிணறு
11.01.2012 அன்று அப்பாவின் அந்தியேட்டி அழைப்பை உதயன் பத்திரிகையில் கொடுப்பதற்காக யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்தேன்.ஆளை விழுங்க ஆவலுடன் காத்திருக்கும் ஆவரங்கால் கிணறைத் தாண்டிய போது அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காத போதும் ஏதோ வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்து மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் குறைத்து,திரும்பிப் பார்த்த போது கிணறு இருந்த இடத்தில் கற்கள் குவிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். மோட்டார் சைக்கிளை நிறுத்தி stand போட்டு விட்டு இறங்கி சில படங்கள் எடுத்துக் கொண்டேன்.கிணற்றருகே கட்டப்பட்டிருந்த மதகில் சிவப்பழமாக அமர்ந்திருந்த முதியவரிடம்  அந்தக் கிணறு மூடப்பட்டதைப் பற்றிப் பேச்செடுத்த போது அந்தக் கிணறு அமைந்திருந்த காணியின் சொந்தக்காரர் வவுனியாவில் இருந்ததாகவும் நான்கைந்து நாட்களுக்கு முன் திடீரென வந்து வேலையாட்களைப் பிடித்து கற்கள் போட்டு கிணற்றை மூடியதாகத் தெரிவித்தார்.ஏன் திடீரென்று மூடினார் என்று தெரியுமா என்று கேட்டேன். “ஏதோவொண்டில போட்டுக் கிடக்குது எண்டு சொல்லித் தான்.... ஏண்டா தம்பி,என்னத்தில போட்டண்டு  சொன்னவன்?” என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்க  அவர் computer இல்” என்று கூறியதும் “ஆ….அதில எல்லாம் இந்தக் கிணத்தப் பத்திப் போட்டுட்டாங்கள் எண்டு சொல்லித் தான் மூடினவன் ” என்று  சொன்னதைக் கேட்க “வல்வை அலையோசை”க்கு சமூக அங்கீகாரம் கிடைத்து விட்ட சந்தோஷம் எனக்கு. காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதையும் தெரியும் தான்.என்றாலும் computer இல்” என்று கூறியது, நான் நம்புவது சரி தான் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.அத்தோடு வல்வை அலையோசை”க்கு ஊக்கம் அவ்வளவாகக் கிடைக்காத போது இதை நான் நம்புவது எனது எழுத்துக்கான ஊக்கமாகவும் அமையும் தானே.
கிணற்றுக்கு அருகிலிருந்து வல்லை வெளி நோக்கிய பார்வையில்


                                        கிணற்றுக்கு அருகிலிருந்து ஆவரங்கால் நோக்கிய பார்வையில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக