ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

வானம்,மேகம்,நிலா,நட்சத்திரம்……….. உவமான,உவமேயங்கள்

    
      வானம்
,மேகம்,நிலா,நட்சத்திரம்……….. உவமான,உவமேயங்கள்


1.நிலாத்தளபதி நட்சத்திர வீரர்களை அழைத்துக் கொண்டு வான யுத்த களத்தில் நுழைய மேக எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள்.
2.வான அரங்கினுள் நுழைந்த நிலா நடிகரைத் தொட்டுப் பார்க்க மேகக் காவலர்களையும் தாண்டி நட்சத்திர ரசிகைகள் முண்டியடித்தார்கள்.
3.நிலா வாத்தியார் வான வகுப்பறையினுள் நட்சத்திர மாணவர்களுக்குப் பாடம் நடத்தி முடிக்கவும் ,மேகப் பெற்றோர் வரவும் சரியாக இருந்தது.
4.நிலாப் பெண் மேக ஆடையைக் களைந்து வான நீச்சல் குளத்தினுள் இறங்க நட்சத்திர வாலிபர்கள் கண் சிமிட்டினார்கள்.
5.வான தேவாலயத்தினுள் நிலாப் பாதிரியார் நட்சத்திர ஜோடிகளுக்குத் திருமணச் சடங்குகளைத் தொடங்க மேக மக்கள் வாழ்த்தினார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக