செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

நிறுவனங்களில் பாவிக்கப் படும் சில விசேட சொற்றொடர்கள்(தொடர்ச்சி)

நிறுவனங்களில் பாவிக்கப் படும் சில விசேட சொற்றொடர்கள்(தொடர்ச்சி)

11. Sign on dotted line: சட்ட ரீதியாக ஆவணம் மூலம் உடன் படுதல்
12. Dead end: முன்னேற்றம் காண முடியாத நிலைமை
13. Chicken feed: மிகவும் குறைத்த கொடுப்பனவு
14: Business is business: வியாபாரத்தின் நோக்கம் இலாபமேயொழிய இரக்கம் பார்ப்பதற்காக அல்ல.
15. Ex gratia: ஒரு நிறுவனம் தொழிற் சட்ட ரீதியாகக் கொடுக்கத் தேவையில்லாத ஆனால் இரக்கப்பட்டுக் கொடுக்கும் கொடுப்பனவு.
16. Ad hoc: ஒரு குறுகிய காலப் பகுதியில் குறித்ததொரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டு, அந்த நோக்கம் நிறைவேறியதும்,கலைந்து விடும் நிறுவன அமைப்பு. 
17. Checks and balances: ஒருவர் அல்லது ஒரு குழு ஒரு நிறுவனத்தில் அளவுக்கு மீறிய அதிகாரங்களைக் கொண்டிருத்தல்.
18. Big brother: பணியாளர்களின் தனிப்பட்ட விடயங்களிலும் தலையிட்டுக் கொண்டு அவர்களை முழுமையாகக் கட்டுப்படுத்தும் ஒரு நிறுவன அமைப்பு.
19. Cash cow: எப்போதும் நல்ல இலாபத்தைத் தரக் கூடிய வியாபாரம் அல்லது வியாபாரத்தின் ஒரு பகுதி
20. Hard cash: நாணயங்களும்,தாள்களும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக