வியாழன், 5 ஏப்ரல், 2012

சில விசேட சொற்றொடர்கள்(தொடர்ச்சி)

                                                        சில விசேட சொற்றொடர்கள்(தொடர்ச்சி)
 
21. Burn the candle in both ends: வேலை மும்முரத்தின் காரணமாக தாமதமாகப் படுக்கைக்குச் செல்லுதலும், அதிகாலையிலேயே எழுதலும்.
22. Cook the books: திருட்டு நோக்கத்தோடு நிறுவனத்தின் கணக்குகளில் பிழையான பதிவுகளை மேற்கொள்ளல்.
23. Acid test: ஒன்றின் தரத்தை அல்லது அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனை.
24. Shut the stable door, after the horse has bolted: ஒரு தீங்கான, பாரதூரமான விடயம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த காரணியைத் தடை செய்தல். (பெரும்பாலும் இந்தச் செயல் பயனில்லாததாக இருக்கும்)
25. Lick the wounds: ஒரு தோல்வியின் பின் கிடைக்கும் மகிழ்ச்சியற்ற அனுபவம்.  
26. Ad infinitum: ஒரு செயல் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக நடைபெறுதல்.
27. Last but not least: கடைசி நபரை அறிமுகப்படுத்தும் போது சொல்லப்படுவது. அதாவது முக்கியத்துவத்தில் அவர் எந்த விதத்திலும் குறைந்தவரல்ல என்பதை அறிவுறுத்துவதற்காக.
28. Generation gap: மூத்த தலைமுறைக்கும்,இளைய தலைமுறைக்கும் எண்ணங்களிலும், கருத்துக்களிலும்,செயல்களிலும் உள்ள வித்தியாசம்.
29. Be under a cloud: ஒரு தவறான செயலைச் செய்திருக்கக் கூடுமென மற்றவர்களால் சந்தேகிக்கப்படும் நிலைமை.
30. The silent majority: ஒரு நாட்டில் அல்லது நிறுவனத்தில் அல்லது வீட்டில் தங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மெளனமாக இருக்கும் அதிக எண்ணிக்கையானோர்.       
120x240 Natural Skin Shop Coupon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக