வியாழன், 5 ஏப்ரல், 2012

மந்திரிமனை

                                                   மந்திரிமனை
 
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 3 k.m தூரத்திலும்,புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலிலிருந்து கிட்டத்தட்ட 1 k.m தூரத்திலும், முத்திரைச் சந்திக்கும் சட்டநாதர் சிவன் கோயிலுக்கு நடுவிலும்  அமைந்துள்ள ஒரு சரித்திரப் புகழ் பெற்ற கட்டிடமே மந்திரிமனையாகும்.
இக்கட்டிடத்தின் முக்கியத்துவம் யாதெனில்,யாழ்ப்பாண அரசு காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும், எஞ்சியுள்ள மிகச்சில  கட்டிடங்களில் இதுவும் ஒன்று என்ற சிறப்பேயாகும்.யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக நல்லூர் விளங்கிய காலப்பகுதியில் போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு முன் வாழ்ந்த மந்திரி ஒருவரின் குடிமனையாக இருந்த கட்டிடமே இதுவெனக் கருதப்படுகின்றது.இந்தக் கட்டிடத்தில் காணப்படும் சில மரத்தாலான தூண்கள், இவை யாழ்ப்பாண அரசு காலத்தைச் சேர்ந்தவை என்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றன.ஆனால் இதன் கட்டிட அமைப்பை நோக்கும் போது இது ஒல்லாந்தரின் கட்டிட பாணியைப் பின்பற்றியதாகக் காணப்படுகிறது.ஆகையால் இது ஒல்லாந்தரின் காலத்தில் பெருமளவு திருத்தங்களுக்கு உட்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
இங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் பெருமளவு பாதிக்கப்பட்ட இக்கட்டிடம் சில ஆண்டுகளுக்கு முன்வரை அருகிலுள்ள சட்டநாதர் சிவன் கோயிலுடன் தொடர்புடைய குடும்பம் ஒன்றினால் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.(நன்றி: விக்கிபீடியா) இதன் சரித்திர முக்கியத்துவம் கருதி 2003 இன் ஆரம்பப் பகுதியில் யாழ் அரச செயலகம் இதற்கென ஒரு நிதியை ஒதுக்கி,திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் வேலையை “யூரோவில்” நிறுவனத்திடம் கையளித்திருந்தது.



160x600 Natural Skin Shop Coupon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக