சனி, 31 டிசம்பர், 2011

நிறுவனங்களில் பாவிக்கப் படும் சில விசேட சொற்றொடர்கள்

நிறுவனங்களில் பாவிக்கப் படும் சில விசேட சொற்றொடர்கள்
ஆங்கில மொழி இன்றைய நவீன உலகில்  தவிர்க்க முடியாததாகி  விட்டது என்று சொன்னால் அது மிகையில்லை.இணையத்தில் கூட எங்களது தாய் மொழியிலேயே இணையங்களைப் பார்வையிடக் கூடியதாக இருப்பதுடன்,எங்கள் தாய் மொழியிலேயே எமது ஆக்கங்களைப் பிரசுரம் செய்யக் கூடியதாக இருந்தாலும் பொதுவாக மின்னஞ்சல்,விண்ணப்பப் படிவங்கள்,மின் வணிகம் போன்றவற்றில் ஆங்கிலம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது.அத்தோடு எங்கள் நடைமுறை வாழ்க்கையில் தொழில் புரியும் இடங்களிலும் வியாபார   நிறுவனங்களிலும் ஆங்கிலத்தில் சில சொற்றொடர்கள் சாதாரணமாகப் பாவிக்கப் படுகின்றது.அச்சொற்றொடர்களைப் பாவிக்கும் சந்தர்ப்பங்களைச் செயற்கையாக வரவழைக்காமல் உரிய சந்தர்ப்பங்களில் அவற்றைப் பிரயோகிப்பது புத்திசாலித்தனமாக இருப்பது மட்டுமன்றி  திரைப்படங்களில் கதாநாயகன் punch dialog  கதைப்பது போன்று நச்சென்றும் அல்லது நறுக்கென்றும் அத்தோடு உங்கள் மேலதிகாரியால் பெரிதும் விரும்பப்படுவதாகவும் இருக்கும்.இவற்றுக்கான விளக்கங்கள் தமிழில் கொடுக்கப்படக் கூடியதாக இருந்தாலும் இவற்றில் பெரும்பாலானவை நேரடியாக மொழி பெயர்க்க முடியாததாகவே இருக்கும்.அப்படிச் செய்ய முயற்சித்தாலும் அது முழி பெயர்ப்பாகவே இருக்கும். இவ்வளவு build up கொடுக்கிறானே,அப்படி என்ன தான் சொல்லப் போகிறான் என்று நீங்கள் எதிர் பார்க்கக் கூடும். என்றாலும் இவற்றில் சில சொற்றொடர்களை நீங்கள் ஏற்கனவே பயன் படுத்தியிருப்பீர்கள் என்றும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்குத் தெரிந்த சொற்றொடர்களை அனுப்புவதற்குத் தயங்க வேண்டாம்.சரியான விளக்கங்களுடன் கூடிய தரமானவை பிரசுரிக்கப்படும்.
1. Mean business: (மீன் பிசினஸ் அல்ல) ஏதாவதொரு இலக்கை அடைவதற்கு                                                           மும்முரமாக இருத்தல்.
2. Breakeven: இலாபமும் நட்டமும் இல்லாத நிலைமை.
3. Blue collar: உடல் ரீதியான உழைப்பை நிறுவனத்துக்கு வழங்கும் தொழிலாளர்கள்.
4. White collar: மனம்,மூளை சம்பந்தப்பட்ட உழைப்பை நிறுவனத்துக்கு வழங்கும் தொழிலாளர்கள்.
5. Pink collar: மிகவும் குறைந்த வருமானத்திற்கு தங்கள் உழைப்பை வழங்கும் பெண்கள்.
6. Red tape: பொதுவாக அரச அலுவலகங்களில் பின்பற்றப் படும் அவசியமில்லாத,கால தாமதத்திற்கு வழி வகுக்கும் நடைமுறைகள்.
7. Growing pain: புதிதாக ஆரம்பிக்கும் நிறுவனம் சிரமங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்கும் நிலைமை.
8. Golden handshake: ஒரு நிறுவனம் தனது செயற்பாடுகளை  முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அல்லது தனது அலுவலகத்தை வேறோர் தூர இடத்திற்கு மாற்றுவதற்காக அல்லது வேறேதும் காரணங்களுக்காகத் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதற்காக அவர்களுக்காகக் கொடுக்கப் படும் பெருந்தொகைப் பணம்.
9. Grave yard shift: இரவு நேரப் பணிகளில்(உ+ம்: வைத்தியசாலை) ஈடுபடும் தொழிலாளர்கள்.
10. Big fish in the small pond:முக்கியத்துவம்  வாய்ந்த நபர் ஒருவர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தல் .  

1 கருத்து:


  1. ஆங்கில சொற்களின் உபயோகம் தவிர்க்க முடியாமல் போய்விட்டது என்று கூறும் போது, இந்த நிலை எப்படி வந்தது என்று சற்று சிந்தித்தாலே விடை கிடைத்து விடும். நாகரீக மோகம்.
    ஆங்கிலத்தில் கதைத்தால் அறிவாளி, ஆங்கிலத்தில் எழுதினால் சிறந்த படைப்பாளி , ஆங்கிலத்தில் சிந்தித்தால் சிந்தனை சிற்பி.
    இது நான் 10 ஆம் வகுப்பில் படிக்கும் போது தோண்றிய உணர்வு!
    இன்று உங்களின் பதிவை வாசிக்கும் போது,
    அன்று 10 ஆம் வகுப்பில் தோண்றியது மீண்டும் ஒரு முறை மனக்கண் முன்னால்!
    வேதனையான விடயம் என்னவென்றால் நாம் இன்னமும்....
    நாம் அறிவாளி, படைப்பாளி, சிந்தனை சிற்பி என்பதிலிருந்து இன்னமும் விடுபடவில்லை என்றே படுகின்றது. இது கற்பனை அல்ல அண்மையில் ஒரு சில நண்பர்களுடன் இது சம்பந்தமாக கருத்துப்பரிமாறல்களை பரிமாறிக்கொண்ட போது உணர்ந்து கொண்டது.
    இது பற்றி உங்க கருத்தில்,
    ஆங்கில சொற்களை பாவிக்கும் சந்தர்ப்பத்தை செயற்கையாக உருவாக்காமல் என்ற வரிகள் ஆக்கபூர்வமான கருத்தாக அமைந்துள்ளது.
    இது என் தனிப்பட்ட ஆதங்கம்.
    அன்புடன்
    குமார்.

    பதிலளிநீக்கு